'தக்ஸ் ஆப் இந்துஸ்தான்' ஏமாற்றம், விமர்சகர்கள் கருத்து

தினமலர்  தினமலர்
தக்ஸ் ஆப் இந்துஸ்தான் ஏமாற்றம், விமர்சகர்கள் கருத்து

ஹிந்தித் திரையுலகில் இந்த ஆண்டின் மிகப் பெரிய படம் என்று எதிர்பார்க்கப்பட்ட படம் 'தக்ஸ் ஆப் இந்துஸ்தான்'. விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கத்தில் அமிதாப்பச்சன், ஆமீர்கான், காத்ரினா கைப், பாத்திமா சனா ஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் இன்று உலகம் முழுவதும் சுமார் 7000 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.

படத்தைப் பற்றி ஆரம்பத்திலேயே எதிர்மறையான கருத்துக்கள் மட்டுமே வெளிவந்து கொண்டிருக்கிறது. படத்தைப் பார்த்த பலரும் படம் பெரிய அளவில் ஈர்க்கவில்லை எனக் கூறி வருகிறார்கள். இப்படி ஒரு ஆமீர்கான் படத்தை எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். படத்தின் ஆரம்பம் மட்டும் ஓரளவிற்கு நன்றாக இருக்கிறது. அதன்பிறகு படம் மிகவும் போரடிக்கிறது என்றே கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

'பாகுபலி 2' படத்தின் வசூலை இந்தப் படம் முறியடிக்கும் என பாலிவுட்டில் பலரும் எதிர்பார்த்த நிலையில் படத்திற்கு இப்படி ஒரு விமர்சனம் கிடைத்திருப்பது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.

மூலக்கதை