அடுத்த ஆண்டு வரை தொடர்கிறது கொண்டாட்டம் டிஜிட்டலுக்கு மாறுங்க... தள்ளுபடி அள்ளுங்க...

தினகரன்  தினகரன்
அடுத்த ஆண்டு வரை தொடர்கிறது கொண்டாட்டம் டிஜிட்டலுக்கு மாறுங்க... தள்ளுபடி அள்ளுங்க...

* பயண டிக்கெட், பெட்ரோல், மருந்துக்கும் ஆபர்* பணமற்ற பரிவர்த்தனையை அதிகரிக்க உத்திசென்னை: பணமற்ற பரிவர்த்தனையை அதிகரிக்கும் வகையில், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோருக்கு கேஷ்பேக் மற்றும் தள்ளுபடி சலுகைகளை நிறுவனங்கள் வாரி வழங்கியுள்ளன. இந்த சலுகை சில இந்த மாதம்,  இந்த ஆண்டு இறுதியிலும், சில அடுத்த ஆண்டும் நீடிக்கின்றன.கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இணையதள வசதி இல்லாத கிராமங்களில் மொபைல் ஆப்ஸ் மூலம் பரிவர்த்தனைகள்  முக்கிய பங்கு வகித்தன. இதை தொடர்ந்து பீம் ஆப்ஸ் எனப்படும் செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இத்தகைய பணமற்ற பரிவர்த்தனைகள் தேசிய பண பரிவர்த்தனை கழகம் மூலம் நடைபெற்று வருகிறது.டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்கச்செய்ய, தேசிய பண பரிவர்த்தனை கழகம் தள்ளுபடி ரூபே கார்டுகள் மற்றும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு தள்ளுபடி சலுகைகளை தீபாவளியையொட்டி அறிமுகம் செய்தது. மாஸ்டர், விசா  கார்டுகளுக்கு மாற்றாக ரூபே கார்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளன. இவற்றை 56 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.இவர்களுக்கு அமேசான், இந்தியன் ஆயில், கல்யாண் ஜூவல்லரி, இந்தியன் ரயில்வே போன்ற நிறுவனங்கள் சலுகை அளிக்கின்றன.உதாரணமாக, இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் (ஐஓசி), தினமும் 10,000 ரூபே கார்டு மற்றும்  பீம் யுபிஐ பயன்படுத்தி பணம் செலுத்துவோருக்கு 5 லிட்டர் எரிபொருளுக்கு அதிகபட்சம் ₹400 வரை கேஷ்பேக் சலுகை வழங்குகிறது. இது வரும் 23ம் தேதி வரை உள்ளது.ரூபே கார்டுக்கு ரெட் பஸ் ரெட்பஸ் வாலட்டில் 10 சதவீத கேஷ்பேக், மிந்த்ரா ஆன்லைன் நிறுவனம் குறைந்த பட்சம் ₹999க்கு வாங்குவோருக்கு ₹300 தள்ளுபடி வழங்குகின்றன. இந்த சலுகை அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை  உண்டு.கோ ஏர் அடிப்படை கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி, அமேசான் ஆன்லைன் நிறுவனம் 10 சதவீத கேஷ்பேக், அதிகபட்சம் ₹50 தள்ளுபடியை இந்த மாதம் 30ம் தேதி வரை வழங்குகின்றன. யுபிஐயில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது வெப்சைட் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ₹1000 வரை தள்ளுபடி, புட் பாண்டா ₹275 அல்லது அதற்கு மேல் பில்தொகை இருந்தால் ₹100 தள்ளுபடி, நெட்மெட்ஸ்  ஆன்லைன் பார்மசி நிறுவனம்அனத்து மருந்துகள் மீதும் 30 சதவீதம் தள்ளுபடி (கேஷ்பேக்குடன் சேர்த்து), சினிபோலிஸ் ₹250க்கு மேல் இருந்தால் ₹150 தள்ளுபடி, தாமஸ்குக் டூர் ஸ் அண்ட் டிராவல்ஸ் 10 சதவீதம் தள்ளுபடி,  ஈசி டைனர் ₹500க்கு ₹250 தள்ளுபடி அளிக்கின்றன. ரூபேயில் பிஎம்எஸ், ₹150 வரை ஒரு சினிமா டிக்கெட் வாங்கினால் மற்றொன்று இலவசம் எனவும், முதன் முதலாக ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டு  பயன்படுத்துவோருக்கு ₹75 தள்ளுபடி சலுகையை வழங்குகிறது. ரூபேயில் பிக்பேஸ்கட் குறைந்த பட்சம் ₹800க்கு வாங்குவோருக்கு 20 சதவீத தள்ளுபடி அளிக்கிறது. இந்த சலுகைகள் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை உண்டு.  யுபிஐயில் ஓலா கேப்ஸ் நிறுவனம் அதிகட்ச தள்ளுபடியாக ₹250 வரும் டிசம்பர் 15ம் தேதி வரை வழங்குகிறது. இந்தியன் ரயில்வேயில் டிக்கெட் வாங்குவோருக்கு 5 சதவீத தள்ளுபடி அடுத்த ஆண்டு ஜூன் 31ம் தேதி வரை  உண்டு. ரூபே கார்டுக்கு கல்யாண் ஜூவல்லரியில் தங்கம் மற்றும் வைர நகை வாங்குவோருக்கு ₹2000 தள்ளுபடி சலுகையை இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை வழங்குகிறது. மேற்கண்ட பரிவர்த்தனைகள் சிலவற்றுக்கு  கூப்பன் கோட் கொடுக்கப்பட்டுள்ளது. சில பீம் யுபிஐ பரிவர்த்தனையை ஸ்கேன் செய்து செலுத்துவோருக்கு வழங்கப்படுகிறது.இதுகுறித்து தேசிய பரிவர்த்தனை கழகத்தின் மூத்த துணை தலைவர் குணால் களவாடியா கூறுகையில், தள்ளுபடி சலுகைகளால், பரிவர்த்தனை கழகத்தின் யுபிஐ மற்றும் ரூபே பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் ஆசைகள்  இந்த பண்டிகை சீசனில் நிறைவேற இது வழி வகுக்கும் என்றார்.* யுபிஐ பரிவர்த்தனை அபாரமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 7.6 கோடியாக இருந்த இந்த பரிவர்த்தனை தற்போது 48.2 கோடியாக உயர்ந்துள்ளது.* ரூபே, யுபிஐ மூலம் பணம் ெசலுத்துவோருக்கு பெட்ரோல், டீசல், பஸ், விமானம், ரயில் டிக்கெட்கள், சினிமா டிக்கெட்கள், ஆன்லைன் ஷாப்பிங் ஆகியவற்றுக்கு தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படுகிறது.  * விசா, மாஸ்டர் கார்டுகளுக்கு மாற்றாக இந்தியாவுக்காகவே உருவாக்கப்பட்ட ரூபே கார்டுகளை 56 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.

மூலக்கதை