செம்மரக்கடத்தலை தடுக்க தமிழக- ஆந்திர எல்லை பகுதிகளில் சிசிடிவி கேமரா: வேலூரில் வனத்துறை அமைச்சர் தகவல்

தினகரன்  தினகரன்
செம்மரக்கடத்தலை தடுக்க தமிழக ஆந்திர எல்லை பகுதிகளில் சிசிடிவி கேமரா: வேலூரில் வனத்துறை அமைச்சர் தகவல்

வேலூர்: வேலூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:வனத்துறை சார்பில் வேலூர் மாவட்டத்திற்கு தேவையான சாலைகள் உள்ளிட்ட வசதிகள் மார்ச் மாதத்திற்கு பிறகு மேற்கொள்ளப்படும். வனத்துறையில் காலியாக உள்ள 1147 இடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் ஆட்கள்  நியமிக்கப்படுவார்கள். ஆந்திராவில் இருந்து தமிழகம் வழியாக செம்மரக்கடத்தலை தடுக்கவும், கண்காணிக்கவும் மாநில சோதனைச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். இதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. 20 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக 100% வெற்றிபெறும். நிலப்பரப்பில் இருந்து 33 சதவீதத்தை வனப்பகுதியாக மாற்றும் பணியை மேற்கொள்வதில் அகில இந்திய அளவில்  தமிழகம் 3வது இடத்தில் உள்ளது என்றார்.

மூலக்கதை