சத்தீஷ்கரில் நக்சல்கள் தாக்குதலில் 5 பேர் பலி

தினமலர்  தினமலர்
சத்தீஷ்கரில் நக்சல்கள் தாக்குதலில் 5 பேர் பலி

ராய்பூர்: சத்தீஷ்கரில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரின் தாந்தேவாடா மாவட்டம் நக்சல்கள் ஆதிக்கம் உள்ள பகுதியாகும். நேற்று இப்பகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சி.ஆர்.பி.எப். படை வீரர்களுடன் பஸ் வந்து கொண்டிருந்தது. பச்சேலி என்னுமிடத்தில் பஸ் வந்த போது திடீரென நக்சல்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு சி.ஆர்.பி.எப். வீரர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.இருவர் காயமடைந்தனர். சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது

மூலக்கதை