சாய்பல்லவியின் புது அவதாரம்

தினமலர்  தினமலர்
சாய்பல்லவியின் புது அவதாரம்


தமிழில் தனக்கென தனி இடத்தை பிடிக்க போட்டி போடுபவர்களில், சாய்பல்லவியும் ஒருவர். இவர் நடித்த தியா படம், எதிர்பார்த்த வரவேற்பை பெறாவிட்டாலும், நீண்ட இடைவெளிக்குப் பின்,
சூர்யாவுடன், என்.ஜி.கே., தனுஷுடன், மாரி - 2 படங்களில் நடித்துள்ளார்.
மாரி - 2 படத்தில், ஆட்டோ ஓட்டுனராக, அராத்து ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தனுஷுக்கு ஈடுகொடுக்கும் வகையில், தரலோக்கலாக இறங்கி நடித்துள்ளார் சாய்பல்லவி. மாரி படத்தின் முதல் பாகத்தில், தனுஷ் ஆட்டோ ஓட்டுனராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை, பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். டிசம்பரில் படம் வெளியாகிறது.

மூலக்கதை