இப்போதைக்கு திருமணம் இல்லை

தினமலர்  தினமலர்
இப்போதைக்கு திருமணம் இல்லை

மாதவன் ஜோடியாக, ரெண்டு படம் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை அனுஷ்கா. அருந்ததி படம் மூலம், திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். பாகுபலி அவரை, உலக அளவில் உச்சத்திற்கு கொண்டு சென்றது. இந்நிலையில், உடல் பருமன் மற்றும் திருமண பேச்சால், புதுப்படங்கள் எதிலும், கமிட் ஆகாமல் இருந்தார். தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பின், மீண்டும் மாதவனுக்கு ஜோடியாக, அனுஷ்கா நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை, ஹேமந்த் மதுகர் இயக்குகிறார். அனுஷ்காவின் பிறந்தநாளை ஒட்டி, அன்றைய தினம் வெளிவந்த அவரது புதுப்பட அறிவிப்பு, இப்போதைக்கு அனுஷ்காவுக்கு திருமணம் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது.

மூலக்கதை