நடிகையரை ஜோக்கர் மாதிரி காட்டாதீர்கள்

தினமலர்  தினமலர்
நடிகையரை ஜோக்கர் மாதிரி காட்டாதீர்கள்

திருமணத்திற்கு பின், சினிமாவில் இரண்டாவது, இன்னிங்சை துவக்கியுள்ள ஜோதிகா, காற்றின் மொழி படம் குறித்தும், தன் திரையுலக அனுபவம் குறித்தும் நம்மிடையே பேசியதிலிருந்து:


காற்றின் மொழி எப்படிப்பட்ட படம்?


என், கேரியரில் மட்டுமல்லாது, இரண்டாவதுஇன்னிங்சில் ரொம்ப முக்கியமான படம். இது, காமெடி கலந்த குடும்ப கதை.


திருமணத்திற்கு பின், பெண்களுக்குசாதகமாக, ஆண்களை வெறுப்பேற்றும்
வகையிலேயே நடிக்கிறீர்களே?

மகளிர் மட்டும், 36 வயதினிலே, நாச்சியார், செக்கச்சிவந்த வானம் என, தொடர்ந்து, எனக்கு வந்த படங்கள்,அதுபோலவே இருந்தன. இந்தக் கதையை எழுதியதே ஆண்கள் தானே. அவர்கள் தான், அந்தக் கதைகளை என்னிடம் எடுத்து வருகின்றனர்.


பெண்களுக்கான கதைகள், இன்னும் நிறைய வர வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன், இந்த மாதிரி கதைகள் வரவில்லை; இப்போது, வருகிறது.படங்களில் பெண்களை மட்டும், ஜோக்கர் போல் காண்பிக்கின்றனர். ஆண்களை ஏன், அப்படி காண்பிக்கக் கூடாது?


குஷி - 2 படத்தில் நடிப்பீர்களா?


புத்திசாலியாக, ஜெனிபர் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டால், கண்டிப்பாக நடிப்பேன். கதை எனக்கு பிடித்திருக்க வேண்டும்.


வரலாற்று படங்களில் நடிக்கஆசையில்லையா?


இல்லை. குடும்பத் தலைவியாக நடிப்பதே, வரலாற்று படம் தான்.


கதைக்காக மொட்டை போடுவீர்களா?


வித்தியாசமான கதை என்றால், நிச்சயம் மொட்டை போடுவேன்.


கணவர் சூர்யாவின் ஆதரவு எப்படி உள்ளது?


ரொம்ப ஆதரவாக இருப்பார். எனக்கு வரும் கதையை, இரண்டு பேரும் கலந்து பேசி தான், முடிவு எடுப்போம். ஆனால், இறுதி முடிவு என்னுடையது தான். இந்த விஷயத்தில், அவர் கதையில் நானும்; என் கதையில் அவரும் தலையிடுவதில்லை.கணவரின் ஆதரவு இருந்தால், பெண்கள் நிச்சயம் சாதிப்பர்.


நாயகியருக்கான கதைக்கு, மார்க்கெட் எப்படி இருக்கிறது?


தற்போது நல்ல மார்க்கெட் உள்ளது. கடந்த காலங்களைப் பார்த்தால், இந்த மாதிரி கதைகள் வெற்றிப்படமாக அமைந்துள்ளன.


ஹாரர், காமெடி என இல்லாமல், நீங்கள் தேர்ந்தெடுக்கும் கதை வித்தியாசமாக உள்ளதே?


எனக்கு வரும் கதைகள் அப்படியிருக்கின்றன. திகில் கதையில் நடிக்க ஆசை; ஆனால், பிடித்த கதைகள் அமையவில்லை. சந்திரமுகி படத்திற்கு பின், அந்த மாதிரி கதை எனக்கு
வரவில்லை.


அடுத்த படங்கள்?


எனக்கு, 36 வயதினிலே படத்தில் நடித்த பின், கதைகள் எதுவும் வரவில்லை. நீண்ட இடைவேளைக்கு பின், மகளிர் மட்டும் வந்தது.நாச்சியார் படத்திற்கு பின் தான், விதவிதமான கதைகள் வருகின்றன. இந்த வயதில், இதுபோன்ற கதைகள் வரும் என, நான் நினைக்கவில்லை. இப்போது, இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி உள்ளேன். இரண்டுமே, வித்தியாசமான கதை தான்.


இப்போதைய நடிகையரில் உங்களுக்கு பிடித்தவர்?


அனைவரையும் பிடிக்கும். குறிப்பாக, நயன்தாரா ரொம்ப பிடிக்கும். அவரது கோலமாவு கோகிலா படம் பார்த்தேன்; அருமை. குறைந்த வயதிலேயே, மகாநதி படத்தில், கீர்த்தி சுரேஷ் சிறப்பாக நடித்துள்ளார்.


புதுவரவு நடிகையர் குறித்து?


இப்போது வரும் நடிகையர், எங்களை விட திறமையானவர்களாக உள்ளனர். அவர்களுக்கான தளம், போதிய அளவு இல்லை. நடிகர்களை மையப்படுத்தி நிறைய கதைகள் வந்து விட்டன. பெண்களுக்கான கதை அனைத்துமே, புதுசாக இருக்கும்.


படப்பிடிப்பு தளங்களில், உங்களுக்கு சவுகரியமாக இருந்த நடிகர் யார்?


சூர்யா, அஜித், மாதவன், விதார்த் ஆகியோர் எனக்கு சவுகரியமாக இருந்தனர்.


குடும்பத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்?


சென்னையில் தான், படப்பிடிப்பு இருக்க வேண்டும் என, சொல்லி விடுவேன். 9:00 மணி முதல், 6:00 மணி வரை தான் வேலை நேரம். பிள்ளைகளை, பள்ளிக்கு அனுப்பிய பின், படப்பிடிப்புக்கு செல்வேன்.


சூர்யா பட நிறுவனத்தில் இருந்து, சம்பளம்சரியாக வருகிறதா?


எனக்கு சம்பளம், டபுள் தான். அவர்களதுவியாபாரம் என்ன என்பது, எனக்கு தெரியும். மற்ற தயாரிப்பாளர்கள் போல் ஏமாற்ற முடியாது.

மூலக்கதை