சிறையில் இருந்து விடுதலை : பாகிஸ்தானை விட்டு வெளியேறுகிறார் ஆசியா பீபி?

தினகரன்  தினகரன்
சிறையில் இருந்து விடுதலை : பாகிஸ்தானை விட்டு வெளியேறுகிறார் ஆசியா பீபி?

இஸ்லாமாபாத்: ‘சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசியா பீபி, சிறப்பு விமானம் மூலம் நெதர்லாந்து செல்கிறார் என்று வெளியான செய்தி முற்றிலும் பொய்’ என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த கிறிஸ்தவ பெண் ஆசியா பீபி. பக்கத்து வீட்டுகாரர்களுடன் ஏற்பட்ட வாய் தகராறில், இவர் முஸ்லிம் வழிபாட்டை இழிவாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றத்துக்காக இவருக்கு கடந்த 2010ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதுதொடர்பான மேல்முறையீட்டில் ஆசியா பீபியை.க்கு விதிக்கப்பட்டதண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து பாகிஸ்தானில் வன்முறை வெடித்தது. இந்நிலையில், ஆசியா பீபி முல்தானில் உள்ள பெண்கள் சிறையில் இருந்து நேற்று முன்தினம் இரவு விடுவிக்கப்பட்டார். இவர் ராவல்பிண்டில் உள்ள நூர்கான் விமானத் தளத்துக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் நெதர்லாந்து கொண்டு செல்லப்படுகிறார் எனவும் பாகிஸ்தான் 24 நியூஸ் செய்தி சேனலில் தகவல் வெளியானது.  இதுபற்றி பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் பசாய் அளித்த பேட்டியில், ‘‘ஆசியா பீபி நாட்டை விட்டு செல்கிறார் என்ற தகவல் முற்றிலும் பொய். உணர்வுப்பூர்வமான விஷயங்களில், ஊடகங்கள்  உறுதியற்ற செய்தி வெளியிடுவது பொறுப்பற்ற செயல்’’ என்றார்.

மூலக்கதை