அமெரிக்க இரவு விடுதியில் 14 பேர் சுட்டுக்கொலை

தினகரன்  தினகரன்
அமெரிக்க இரவு விடுதியில் 14 பேர் சுட்டுக்கொலை

வாஷிங்டன்: அமெரிக்காவில் இரவு விடுதியில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பலியாகினர்.அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள புறநகர் பகுதி தவுசன்ட் ஓக்ஸ். இங்குள்ள இரவு விடுதியில் நேற்று முன்தினம் இரவு கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 11.20 மணியளவில் நீண்ட கருப்பு கோட், முகமூடி, தொப்பி அணிந்த நிலையில் விடுதிக்குள் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியுடன் புகுந்தார். அவர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக சுட்டார். அதிர்ச்சியடைந்த  மக்கள் அங்கிருந்த கழிவறைகளில் பதுங்கியும், ஜன்னல் வழியே குதித்தும் தப்பியோட முயற்சித்தனர். சிலர் ஜன்னல்களை சேர்களால் உடைத்தும் வெளியே குதித்து காயங்களுடன் உயிர் தப்பினர்.அப்போது, அந்த நபர் வெடிகுண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினார். இதில் வென்சுரா மாவட்ட துணை ஷெரிப், கல்லூரி மாணவர்கள், காசாளர் உள்ளிட்ட பலர் படுகாயம் அடைந்தனர். இதில் 13 ேபர் உயிரிழந்தனர்.  இதுபற்றி அறிந்து விரைந்து வந்த போலீசார் வெறிச்செயலில் ஈடுபட்ட நபரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் உயிரிழந்தார். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டவர் இயான் டேவிட் லாங் (28) என்ற முன்னாள் கடற்படை வீரர் என தெரியவந்துள்ளது.

மூலக்கதை