தஜிகிஸ்தான் சிறையில் பயங்கர மோதல் : 20 கைதிகள் பலி

தினகரன்  தினகரன்
தஜிகிஸ்தான் சிறையில் பயங்கர மோதல் : 20 கைதிகள் பலி

துசான்பே:  தஜிகிஸ்தான் சிறையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட பயங்கர மோதலில் 20 கைதிகள் உயிரிழந்தனர். மேலும் 2 காவலர்களும் கொல்லப்பட்டனர். தஜிகிஸ்தானில் உள்ள குஜாந்தில் சிறைச்சாலை அமைந்துள்ளது. நகரிலேயே இரண்டாவது மிகப்பெரிய சிறைச்சாலை இதுவாகும். கொலை உள்ளிட்ட மோசமான குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றவர்கள் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கைதிகளிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறியது. இதில் 20 கைதிகள் உயிரிழந்தனர். மேலும் 2 சிறை காவலர்களும் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சிறையில் ஏற்பட்ட மோதல், இறந்த கைதிகளின் எண்ணிக்கை உள்ளிட்டற்றை அரசு இதுவரை உறுதி செய்யவில்லை.

மூலக்கதை