சர்க்கார் படத்திற்கெதிராக. போராட்டம்: நடிகர் ரஜினி கண்டனம்

தினமலர்  தினமலர்
சர்க்கார் படத்திற்கெதிராக. போராட்டம்: நடிகர் ரஜினி கண்டனம்

சென்னை: சர்கார் திரைப்படம், தமிழக அரசியல் வட்டாரத்தில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இலவசங்களை அவமதிப்பதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினி டுவிட்டரி்ல் தெரிவித்துள்ளதாவது: சர்க்கார் படத்தின் காட்சிகளை நீக்க போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள்... தணிக்கை குழு தணி்க்கை செய்து படத்தை வெளியிட்ட பிறகு . இத்தகைய சட்டவிரோதமான செயல்களை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அதில் ரஜினி கூறியுள்ளார்.


மூலக்கதை