உலக கோப்பை ஹாக்கி : இந்திய அணி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
உலக கோப்பை ஹாக்கி : இந்திய அணி அறிவிப்பு

புதுடெல்லி: உலக கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் அனுபவ வீரர்களான ருபிந்தர் பால் சிங், எஸ்.வி.சுனில் இடம் பெறவில்லை.உலக கோப்பை ஹாக்கி தொடர் வரும் 28ம் தேதி புவனேஸ்வரில் தொடங்குகிறது. இதற்கான 18 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் மன்பிரீத் சிங் தலைமையிலான அணியில் பி.ஆர்.ஜேஷ், கிருஷண் பகதூர் பதக் இரு கோல் கீப்பர்கள் இடம் பெற்றுள்ளனர். துணை கேப்டனாக கன்குஜம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அணியில் அனுபவ வீரரான ருபிந்தர் பால் சிங் காயம் முழுமையாக குணமாகாததாலும், பார்மில் இல்லாத எஸ்.வி.சுனிலும் இடம் பெறவில்லை. சி பிரிவில் இந்தியா, பெல்ஜியம் (3வது ரேங்க்), கனடா, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் லீக் சுற்றில் முதலிடம் பெறும் அணி மட்டுமே கால் இறுதிக்கு முன்னேற முடியும். இந்திய அணி: கோல்கீப்பர்கள்: பி.ஆர்.ஜேஷ், கிருஷண் பகதூர் பதக், தடுப்பாட்டக்காரர்கள்: ஹர்மன்பிரீத் சிங், பிரிந்திரா லக்ரா, வருண் குமார், கோதாஜித் சிங் கடங்பம், சுரேந்தர் குமார், அமித் ரோகிதாஸ், நடுகள வீரர்கள்: மன்பிரீத் சிங் (கேப்டன்), கன்குஜம் (துணை கேப்டன்), நிலகந்த ஷர்மா, ஹர்திக் சிங், சுமித், முன்கள வீரர்கள்: அக்ஷதீப் சிங், மன்தீப் சிங், தில்பிரீத் சிங், லலித் குமார் உபாத்யாய், சிம்ரன்ஜித் சிங்.

மூலக்கதை