முதல் ஒருநாள் போட்டி : பாகிஸ்தானை வென்றது நியூசி.

தினகரன்  தினகரன்
முதல் ஒருநாள் போட்டி : பாகிஸ்தானை வென்றது நியூசி.

அபுதாபி: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 47 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன் எடுத்தது. அனுபவ வீரர் டெய்லர் 80 ரன் (112 பந்து), லாதம் 68 ரன் (64 பந்து) எடுத்து ஆட்டமிழந்தனர். முன்ரோ 29, கேப்டன் வில்லியம்சன் 27, சோதி 24, சவுத்தீ 20 ரன் எடுத்தனர். 42வது ஓவரை வீசிய சதாப் கான் 2, 3, 5வது பந்தில் லாதம், நிக்கோலஸ் (0), கிராண்டோமி (0) ஆகிய 3 பேரை வெளியேற்றி, நியூசிலாந்தின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார். சிறப்பாக பந்துவீசிய சதாப்கான், சாகீன் ஷா அப்ரிடி தலா 4 விக்கெட், இமாத் வாசிம் 1 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 47.2 ஓவரில் 216 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி பரிதாபமாக தோற்றது. கேப்டன் சர்பிராஷ் அகமது 64, இமாத் வாசிம் 50 ரன் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற முன்னிலை பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ச்சியாக 12 ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை