ஆறு நாட்களுக்கு பின் மீண்டும் மஞ்சள் ஏலம்

தினமலர்  தினமலர்
ஆறு நாட்களுக்கு பின் மீண்டும் மஞ்சள் ஏலம்

ஈரோடு:ஆறு நாட்களுக்குப் பின், இன்று, ஈரோட்டில் மஞ்சள் ஏலம் நடக்கிறது.ஈரோடு பகுதியில், ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனைக் கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என, நான்கு இடங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை, மஞ்சள் ஏலம் நடக்கிறது.


கடந்த, 3, 4ல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையால் வழக்கமான விடுமுறை விடப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 5, 6, 7, 8 ஆகிய, நான்கு நாட்கள், விடுமுறை விடப்பட்டது. ஆறு நாட்கள் விடுமுறைக்குப்பின், இன்று முதல், மீண்டும் மஞ்சள் ஏலம், நான்கு இடங்களிலும் துவங்குகிறது. தொடர் விடுமுறை விடப்பட்டதால், சில நாட்களுக்கு வரத்து அதிகம் இருக்குமென்று, வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மூலக்கதை