குறு, சிறு, நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி., உதவி மையம்

தினமலர்  தினமலர்
குறு, சிறு, நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி., உதவி மையம்

சென்னை:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ, திருவள்ளூர் மற்றும் வேலுார் மாவட்டங்களில், ஜி.எஸ்.டி., சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இது குறித்து, ஜி.எஸ்.டி., ஆணையர், ரவீந்திரநாத் கூறியதாவது:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான ஆதரவு திட்டத்தை மத்திய அரசு, 2ம் தேதி துவங்கியது. இந்நிறுவனங்களுக்கு, ஜி.எஸ்.டி., பிரச்னைகளுக்கும் உதவ, ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய கலால் துறை சார்பில், திருவள்ளூர் மற்றும் வேலுார் மாவட்டங்களில் சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


வரி செலுத்துதல், வரிக்கான கடன் கிடைக்க செய்தல், செலுத்திய வரியை திரும்பப் பெறுவது ஆகியவற்றில் உள்ள நுட்பமான பிரச்னைகளை அறிய, இந்த மையங்கள் உதவும்.அடுத்த, 100 நாட்களுக்கு, தொழில் நிறுவனங்கள் செலுத்திய கூடுதல் வரியை திரும்ப பெற, இந்த மையம் முன்னுரிமை அளிக்கும்.திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், 46, வள்ளலார் தெரு, பெரிய குப்பம், திருவள்ளூர் – 602 001 என்ற முகவரியிலும், 044 2621 5765 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.


வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், மத்திய வருவாய் கட்டடம், பாரக் மைதான், ஆபீசர் லைன், வேலுார் – 632 001 என்ற முகவரியிலும், 0416– 2221387; சிப்காட் தொழிற்பேட்டை, ராணிப்பேட்டை – 632 403 என்ற முகவரியிலும், 04172 – 244547 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளவும்.ஜி.எஸ்.டி., தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும், 044 2614 2850 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மூலக்கதை