டெஸ்லா தலைவர் பதவியில் இருந்து இலன் மஸ்க் விலகல்

தினமலர்  தினமலர்
டெஸ்லா தலைவர் பதவியில் இருந்து இலன் மஸ்க் விலகல்

புதுடில்லி,:அமெரிக்காவின், பிரபல டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து, இலன் மஸ்க் விலகியுள்ளார்.

இது குறித்து, இந்நிறுவனத்தின் இயக்குனர் குழு வெளியிட்டுள்ள அறிக்கை:டெஸ்லா நிறுவனர், இலன் மஸ்க், தலைவர் பதவியில் இருந்து விலகவும், பங்குச் சந்தை ஆணையத்தின், 2 கோடி டாலர் அபராதத்தை செலுத்தவும் முன்வந்துள்ளார்.இதையடுத்து, டெஸ்லாவின் புதிய தலைவராக, ஆஸ்திரேலியாவின் டெல்ஸ்ட்ரா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி, ராபின் டென்ஹோம் தேர்வு செய்யப்பட்டுஉள்ளார்.அவர்,


அந்நிறுவனத்தில் இருந்து முறைப்படி விலகும் வரை, ஆறு மாத காலத்திற்கு, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை பொறுப்பை பகுதி நேரமாக கவனிப்பார்.அவருக்கு, முழு ஒத்துழைப்பை வழங்குவதாக, இலன் மஸ்க் தெரிவித்துள்ளார். இலன் மஸ்க், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தொடர்ந்து நீடிப்பார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


இலன் மஸ்க், சில மாதங்களுக்கு முன், டெஸ்லா நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, அந்நிறுவனப் பங்கு விலை, பல மடங்கு உயர்ந்தது. ஆனால், அவ்வாறு முதலீடு பெறப்படவில்லை என, தெரியவந்ததும், பங்கின் விலை வீழ்ச்சி கண்டது.


இந்த மோசடி தொடர்பாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையம், இலன் மஸ்கிற்கு, 148 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.அவரை, டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு, இயக்குனர் குழு வற்புறுத்தி வந்தது. இதையடுத்து, வேறுவழியின்றி, அவர் பதவி விலகியுள்ளார்.

மூலக்கதை