துணிவில்லாத அரசு தடம் புரளும் : சர்காருக்கு கமல் ஆதரவு

தினமலர்  தினமலர்
துணிவில்லாத அரசு தடம் புரளும் : சர்காருக்கு கமல் ஆதரவு

விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள சர்கார் படத்திற்கு ஆளும் அதிமுக., அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் சர்கார் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் முன்பாக அதிமுக.,வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்நிலையில் சர்ச்சை காட்சிகளை நீக்க படக்குழு சம்மதம் சொல்லியிருக்கிறது.

சர்காருக்கு கிளம்பி உள்ள எதிர்ப்புக்கு நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது : "முறையாக சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல. விமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு தடம் புரளும். அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்" என பதிவிட்டிருக்கிறார்.

மூலக்கதை