ஓவியாவை காதலிக்கவில்லை : ஆரவ் பேட்டி

தினமலர்  தினமலர்
ஓவியாவை காதலிக்கவில்லை : ஆரவ் பேட்டி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்து பங்கேற்றவர்கள் ஓவியா மற்றும் ஆரவ். நிகழ்ச்சியிலேயே இருவருக்கும் காதல் - மோதல் ஏற்பட்டு, ஓவியா வெளியேறி விட, ஆரவ்வை நினைத்து, அவர் தற்கொலைக்கு முயற்சித்ததாகக் கூட தகவல் பரவியது.

ஆனாலும், இருவரும் காதல் குறித்து எதுவுமே பேசாததால், தொடர்ந்து, அது தொடர்பான செய்திகள் நால பக்கமும் பரபரப்பாக பரவின. இந்நிலையில், சமீபத்தில் நடிகர் ஆரவ்வின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது. அதில் ஆரவ்வின் நண்பர்க்ளோடு, நடிகை ஓவியாவும் கலந்து கொள்ள மீண்டும், காதல் செய்திகள் பரவின.

இதற்கிடையில், நடிகர் ஆரவ், அளித்துள்ள பேட்டியில், 'ஓவியா எனக்கு நண்பர்' என தெள்ளத் தெளிவாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

காதல் கதை அம்சம் கொண்ட படங்கள்தான் எனக்கு தொடர்ந்து வருகின்றன். ஆனால், கதைக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று சொல்லி, பல படங்களைத் தவிர்த்து விட்டேன். ஓவியாவுடன் சேர்ந்து நடிக்கும் ஆவல் இருக்கிறது. ஆனால், அதற்கேற்ப கதையுடன், தயாரிப்பாளரும் வர வேண்டும். எனது பிறந்த நாளுக்கு ஓவியா வந்திருந்தார்; வாழ்த்தினார். அதைத் தொடர்ந்து நாங்கள் இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவுகின்றன. அதில் துளியும் உண்மையில்லை. நானும் அவரும் நல்ல நண்பர்கள்; அவ்வளவுதான்.

இவ்வாறு ஆரவ் கூறியுள்ளார்.

மூலக்கதை