ரஜினி, அஜித்தோடு மோதும் சிம்பு

தினமலர்  தினமலர்
ரஜினி, அஜித்தோடு மோதும் சிம்பு

நடிகர் சிம்பு நடித்து வெளியான 'செக்க சிவந்த வானம்' படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இயக்குநர் சுந்தர்.சி படத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து வெற்றியடைந்த படம் 'அத்தரிண்டிக்கி தாரடி'. இந்தப் படத்தைத்தான் தமிழில் ரீ மேக் செய்கிறார் சுந்தர் சி. புதிய படத்துக்கு வந்தா ராஜாவாத்தான் வருவேன் என, சுந்தர் சி பெயரிட்டுள்ளார்.

இந்தப் படத்தின் படபிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய, சுந்தர் சி திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே, நடிகர் அஜித் நடிப்பில் உருவாகும் 'விஸ்வாசம்' மற்றும் ரஜினியின் 'பேட்ட' ஆகிய படங்களும் பொங்கலுக்கு ரிலீசாகும் நிலையில், பெரிய நடிகர்களின் படங்களோடு சிம்பு படமும் மோதவிருக்கிறது.

மூலக்கதை