தலைப்பை சிபாரிசு செய்த சிம்பு

PARIS TAMIL  PARIS TAMIL
தலைப்பை சிபாரிசு செய்த சிம்பு

 லைகாவின் தயாரிப்பில் சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிம்புவுடன் கேத்ரின் தெரெசா, மேகா ஆகாஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற 'அத்திரண்டிகி தாரேதி' படத்தின் ரீமேக் இது. விரைவில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ள நிலையில் இந்தப்படத்தின் டைட்டில் சில தினங்களுக்கு முன் வெளியானது.

இந்த படத்திற்கு 'வந்தா ராஜாவாதான் வருவேன்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான மணிரத்னத்தின் 'செக்க சிவந்த வானம்' படத்தில் சிம்பு பேசும் வசனத்தையே இப்படத்திற்கு தலைப்பாக சூட்டியிருக்கிறார்கள்.

இந்தப்படத்துக்கு என்ன தலைப்பு வைப்பது என்று ஆலோசனை நடைபெற்றபோது, 'வந்தா ராஜாவாதான் வருவேன்' என்ற டைட்டிலை சுந்தர்.சியிடம் சிபாரிசு செய்ததே சிம்புதானாம். அவர் சொன்ன டைட்டில், படத்தின் கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்ததால் அந்த டைட்டிலை ஏற்றுக்கொண்டாராம் சுந்தர் சி!

 

மூலக்கதை