முழு பயன்பாட்டில் ஏவுகணை தாக்குதல் நடத்தும் நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். அரிஹாண்ட் !

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

கடலுக்குள் இருந்து ஏவுகணை வீசும் திறன்படைந்த நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் அரிஹாண்ட் முழுமையான செயல்பாட்டுக்கு வந்தது.

 கடலுக்குள் இருந்து ஏவுகணை வீசும் திறன் படைத்த நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்கும் திட்டம் கடந்த 30 ஆண்டுகளாக நடந்து வந்தது. இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஐ.என்.எஸ். அரிஹாண்ட் என்ற நீர்மூழ்கி கப்பல்கள் முழுமையான செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 

6 ஆயிரம் டன் எடையுள்ள இந்த நீர்மூழ்கி கப்பல் மூலம் கடலுக்குள் எந்த பகுதியிலிருந்து ஏவுகணை வீச முடியும். ஆழ்கடலில் மூழ்கியிருக்கும் இந்த கப்பலை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. எதிரி நாட்டின் கடற்கரையை நெருங்கி அங்கிருந்து ஏவுகணையை வீச முடியும். 

நிலத்தில் இருந்து ஏவப்படும் குறுகிய தூர ஏவுகணைகள் தாக்க முடியாத இலக்குகளை இந்த நீர்மூழ்கி கப்பல் மூலம் தகர்க்க முடியும். இந்த கப்பல் தனது முழுமையான ரோந்து பணியை வெற்றிகரமாக முடித்தது. 

ரோந்து பணியை நிறைவு செய்து ஐ.என்.எஸ். அரிஹாண்ட் நீர்மூழ்கி கப்பல் திரும்பும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். 

"அரிஹாண்ட் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல். இதனை உருவாக்கி இதற்கென பணியாற்றிய அனைத்து பிரிவினர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விடுத்துள்ள செய்தியில், 

‘‘நிலம் மற்றும் வானில் இருந்து அணு ஆயுதங்களை ஏவும் திறன் இந்தியாவுக்கு ஏற்கனவே உள்ளது. தற்போது கடலில் இருந்து அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறனை ஐஎன்எஸ் அரிஹாண்ட் நிறைவு செய்துள்ளது’’ என குறிப்பிட்டு உள்ளார்.

மூலக்கதை