ரத்ததான விதிமுறைகளை மத்திய அரசு கடுமையாக்கியது!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

ரத்த தானம் செய்வதற்கான விதிமுறைகளை மத்திய அரசு கடுமையாக்கி உள்ளது.

இது பற்றி தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைப்படி ரத்த தான விதிகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது. 72 மணி நேரம் சிறையில் இருந்தவர்களின் ரத்தத்தை தானம் செய்யக் கூடாது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

சிறையில் இருந்தவர்களின் ரத்தத்தில் பல்வேறு நோய்க் கிருமிகள் கலந்திருப்பது பல்வேறு சோதனைகள் மூலம் தெரிய வந்துள்ளது. அப்படிப்பட்டவர்களின் ரத்தம் தானம் செய்யப்பட்டால், தானம் பெறும் நோயாளிக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

சிறையில் இருப்பவர்களால் பாலியல் சம்பந்தப்பட்ட நோய்கள் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம். இதனால்தான் ரத்தத்தை தானம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மூலக்கதை