அமெரிக்காவில் இடைத்தேர்தல் முடிவை தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றங்கள் செய்ய ட்ரம்ப் முடிவு

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் இடைத்தேர்தல் முடிவை தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றங்கள் செய்ய ட்ரம்ப் முடிவு

வாஷிங்டன்: அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்வதற்கு அதிபர் ட்ரம்ப் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமது நிர்வாகத்தில் ஒரு சில மாற்றங்களை செய்வது குறித்து பரிசீலனை செய்து வருவதாக கூறினார். குறிப்பாக அமைச்சரவை மற்றும் அரசின் முக்கிய பொறுப்புகளில் ஒரு வாரத்துக்குள் சில மாற்றங்கள் செய்யப்படும் என தெரிவித்து இருந்தார். பல்வேறு பதவிகளுக்கு வெவ்வேறு நபர்களை தேடி வருவதாகவும் கூறினார். ஏற்கனவே ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை வழங்கியுள்ளார். அதே போல ட்ரம்பின் உத்தரவை அடுத்து, அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞராக செயல்பட்டு வந்த ஜெப் செஸ்ஸன்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். இந்த சூழலில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் சாராஸ் ஆண்ட்ரசும் விரைவில் பதவி விலக போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல உள்துறை செய்தித் தொடர்பாளரின் பதவியும் கேள்விக்குறியாக உள்ளது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது சிஎன்என் செய்தியாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை