குறைந்த ஓட்டத்துக்குள் சுருண்டது இலங்கை! ஸ்திரமான நிலையில் இங்கிலாந்து

PARIS TAMIL  PARIS TAMIL
குறைந்த ஓட்டத்துக்குள் சுருண்டது இலங்கை! ஸ்திரமான நிலையில் இங்கிலாந்து

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 12 ஓட்டங்களை எதிர்கொண்டு விக்கெட் இழப்பின்றி 38 ஓட்டங்களை பெற்றுள்ளது.
 
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலாம் நாள் முடிவில் தனது முதல் இன்னிங்ஸில் இன்னிங்ஸில் 91 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை குவித்திருந்த வேளை முதலாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
 
ஆடுகளத்தில் 87 பென் போக்ஸ், ஜெக் லேச் 14 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
 
இந் நிலையில் 321 ஓட்டத்துடன் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 342 ஓட்டங்களை பெற்றது.
 
இங்கிலாந்து அணி சார்பில் பென் போக்ஸ் 107 ஓட்டத்தையும், ஜென்னிங் 46 ஓட்டத்தையும், சாம் குர்ரன் 48 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.
 
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தில்றூவான் பெரோ 5 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மால் 3 விக்கெட்டுக்களையும், அகில தனஞ்சய மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
 
இனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 68 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. 
 
இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்தியூஸ் 52 ஓடத்தையும், தினேஷ் சந்திமால் 33 ஓட்டத்தையும், திக்வெல்ல 28 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொணடனர்.
 
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் மொய்ன் அலி 4 விக்கெட்டுக்களையும், ஜேக் லேச், அடீல் ரஷத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், அண்டர்சன் மற்றும் சாம் குர்ரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
 
இந் நிலையில் 139 ஓட்ட முன்னிலையில் இன்றைய தினமே தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது எதுவித விக்கெட் இழப்பின்றி 12 ஓவர்களுக்கு 32 ஓட்டங்களை பெற்றுள்ளது.
 
ஆடுகளத்தில் ரோரி பன்ஸ் 11 ஓட்டத்துடனும், ஜென்னிங் 26 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். இன்று போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமாகும்

மூலக்கதை