தீபாவளியை முன்னிட்டு முகூர்த்த வர்த்தகம் துவக்கம்

தினமலர்  தினமலர்
தீபாவளியை முன்னிட்டு முகூர்த்த வர்த்தகம் துவக்கம்

மும்பை : வடமாநிலங்களில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்திய பங்குச்சந்தைகளில் முகூர்த்த வர்த்தகம் என சொல்லப்படும் சிறப்பு வர்த்தகம் துவங்கி உள்ளது. மாலை 5.30 மணி முதல் 6.30 வரை ஒரு மணிநேரம் இந்த வர்த்தகம் நடக்கும். இந்த சமயத்தில் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தால் முதலீடு பெருகும் மற்றும் வியாபார வளர்ச்சி பெரும் என்பது நம்பிக்கையாக கருதப்படுகிறது.

முகூர்த்த வர்த்தகத்தின் போது மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 200 புள்ளிகளுக்கு அதிகமாகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 50 புள்ளிகளுக்கு அதிகமாகவும் உயர்வுடன் காணப்பட்டன.

மூலக்கதை