ஒரே ஓவரில் 43 ரன்! : நியூசி. ஜோடியின் சாதனை

தினகரன்  தினகரன்
ஒரே ஓவரில் 43 ரன்! : நியூசி. ஜோடியின் சாதனை

நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் நடந்த உள்ளூர் ஒருநாள் போட்டியில் வடக்கு - மத்திய மாவட்ட அணிகள் மோதின. இதில் மத்திய மாவட்ட அணி பவுலர் வில்லியம் லூடிக் (தென் ஆப்ரிக்காவில் பிறந்தவர்) வீசிய ஓவரில் ஜோ கார்ட்டர் - பிரெட் ஹாம்ப்டன் ஜோடி 6 சிக்சர் உட்பட 43 ரன் விளாசியது. வில்லியம் சில ‘நோ பால்’ வீசியது ரன் குவிப்புக்கு பெரிதும் உதவியது (4, 6+ நோ பால், 6+ நோ பால், 6, 1, 6, 6, 6). லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் இது உலக சாதனையாக அமைந்தது. இதற்கு முன்பாக ஒரே ஓவரில் 39 ரன் எடுக்கப்பட்டதே அதிகபட்சமாகும்.

மூலக்கதை