பங்கு வெளியீட்டில் நியோஜென் கெமிக்கல்ஸ்

தினமலர்  தினமலர்
பங்கு வெளியீட்டில் நியோஜென் கெமிக்கல்ஸ்

புதுடில்லி, நவ. 8-–நியோஜென் கெமிக்கல்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபியிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருக்கிறது.எழுபது கோடி ரூபாய் மதிப்புக்கு, புதிய பங்குகளை வெளியிட திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். மேலும், 29 லட்சம் ரூபாய் அளவுக்கு, நிறுவனர்கள், தங்கள் கைவசமுள்ள பங்குகளை விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளனர்.புரோமைன் மற்றும் லித்தியம் அடிப்படையிலான சிறப்பு ரசாயனங்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கிறது, நியோஜென் கெமிக்கல்ஸ் நிறுவனம்.பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை கொண்டு, நிறுவன கடன்களை அடைக்கவும், பொதுவான நிர்வாக தேவைகளுக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, இங்கா அட்வைசர்ஸ் மற்றும் பாட்லிவாலா அண்ட் கரானி செக்யூரிட்டிஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.இந்நிறுவனத்தின் பங்குகள், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகிய சந்தைகளில் பட்டியலிடப்படும் என,தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை