ரூ.19 கோடி தான் உள்ளது: ஆர்காம் நிறுவனம் தகவல்

தினமலர்  தினமலர்
ரூ.19 கோடி தான் உள்ளது: ஆர்காம் நிறுவனம் தகவல்

கோல்கட்டா: அனில் அம்பானியின், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனங்கள், அவற்றின், 144 வங்கி கணக்குகளில், வெறும், 19 கோடி ரூபாய் தான் உள்ளது என, டில்லி ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளன.இந்த இரண்டு நிறுவனங்களிடம் இருந்து, 230 கோடி ரூபாய் நிலுவையை வசூலிக்க உத்தரவிடக் கோரி, அமெரிக்கன் டவர் கார்ப்பரேஷன் நிறுவனம், டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.இந்த வழக்கில், இரு நிறுவனங்களும், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளன. அதில் ரிலையன்ஸ் கம்யூ., நிறுவனத்தின், 119 வங்கி கணக்குகளில், 17.86 கோடி ரூபாய்; ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தின், 25 வங்கிக் கணக்குகளில், 1.48 கோடி ரூபாய் தான் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு விசாரணை, டிச., 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆர்காம் நிறுவனம், 46 ஆயிரம் கோடி ரூபாய் கடன் நெருக்கடியால், 2017ல் வயர்லெஸ் தொலைதொடர்பு சேவையை நிறுத்தியது. கண்ணாடி நாரிழை கம்பி வட பிரிவை, ஆர்ஜியோ நிறுவனத்திற்கு, 5,000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது.

மூலக்கதை