ரிசர்வ் வங்கி கவர்னர் வரும் 19ல் ராஜினாமா?

தினமலர்  தினமலர்
ரிசர்வ் வங்கி கவர்னர் வரும் 19ல் ராஜினாமா?

புதுடில்லி: வாராக் கடன் தொடர்பாக, பொதுத் துறை வங்கிகள் சிலவற்றின் மீதான, கடுமையான நடவடிக்கையை தளர்த்தவேண்டும் என, ரிசர்வ் வங்கியிடம், மத்திய அரசு கோரி வருகிறது.இதன் மூலம், இவ்வங்கிகள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்கி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவலாம் என்பது, மத்திய அரசின் யோசனை. மேலும், ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில், வங்கிகளின் மூலதனத்தை உயர்த்தி, அவற்றின் சொத்து மதிப்பை அதிகரித்து, சந்தையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தவும், மத்திய அரசு விரும்புகிறது.இந்த யோசனைகளை ஏற்க, ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது. இதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைக்க மத்திய அரசு முயன்றதால், அவ்வங்கி இயக்குனர், உர்ஜித் படேல் மனதளவிலும், உடல் அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதனால், வரும், 19ல் நடைபெறும் ரிசர்வ் வங்கி இயக்குனர் கூட்டத்தில் அவர், தன் ராஜினாமா முடிவை வெளியிடுவார் என, தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை