மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா

தினகரன்  தினகரன்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா

லக்னோ :  மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியை இந்திய அணி வென்று  தொடரை கைப்பற்றியது.  71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வென்றது. முன்னதாக டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 195 ரன்களை குவித்தது. அபாரமாக ஆடிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 61 பந்துகளில் 111 ரன்களை குவித்தார். டி20 போட்டிகளில் அதிக சதங்கள்(4) அடித்து சாதனை படைத்தார் ரோகித் சர்மா.196 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 124 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் கலீல், குல்தீப்,பும்ரா, புவனேஸ்வர் குமார் தலா 2விக்கெட்களை  விழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர். இந்த வெற்றியின் மூலம் 3போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி கைப்பற்றி உள்ளது.

மூலக்கதை