மனம் திறக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்

PARIS TAMIL  PARIS TAMIL
மனம் திறக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்

 ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் தன்னையும் தற்கொலை எண்ணம் வாட்டியதாக தெரிவித்தார். 

 
"எனது 25 வயது வரை, தற்கொலை எண்ணம் எனக்குள் எழுந்ததுண்டு. அவ்வப்போது நம்மில் பலரும், நாம் சிறப்பானவன் கிடையாது என நினைக்கிறோம். நான் என் தந்தையை இழந்ததால் இவ்வாறு உணர்ந்திருக்கிறேன்.. அதன்பின் பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தது.
 
"அவை எல்லாமும் செயலற்று போனதாக இருந்தது. என் தந்தையும் இறந்து விட்டதால், நான் அதிக திரைப்படங்களை ஏற்கவில்லை. எனக்கு 35 திரைப்படங்கள் கிடைத்தது, அவற்றில் நான் இரண்டை மட்டுமே தேர்வு செய்தேன். 
 
 
 
"இந்த எண்ணம் ஒருவிதத்தில் எனக்குள் தைரியத்தை ஏற்படுத்தியது. மரணம் அனைவருக்கும் நிரந்தரமான ஒன்று. எல்லாவற்றுக்கும் முடிவு காலம் இருக்கும் போது, ஏன் பயம் கொள்ள வேண்டும்?"
 
என் வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகள் எனக்குள் தைரியத்தை ஏற்படுத்தின என ஏ.ஆர். ரஹ்மான் தன் வாழ்வில் ஏற்பட்ட கடினமான நிகழ்வுகளை தன் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.

மூலக்கதை