தலைமைப் பொறுப்பை ஏற்றார் ரோஹத்!

PARIS TAMIL  PARIS TAMIL
தலைமைப் பொறுப்பை ஏற்றார் ரோஹத்!

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டி இன்று கொல்கத்தாவில் இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
 
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள், மூன்று இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகின்றது.
 
இதில் டெஸ்ட் தொடரை 2:0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3:1 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில் இன்று இருபதுக்கு 20 போட்டியில் மேற்கிந்திய அணியை மீண்டும் சந்திக்கிறது.
 
இந் நிலையில் மேற்கிந்திய அணியில் சகல துறை ஆட்டக்கரான ரசல் காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர். எனினும் அவர் இருபதுக்கு 20 போட்டிகளில் அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் காயம் குணமடையாத காரணத்தினால் இருபதுக்கு 20 தொடரிலிருந்தும் விலகியுள்ளார்.
 
அத்துடன் ஒருநாள் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக அஸ்லே நர்ஸ்ஸும் இப் போட்டியிலிருந்து விலயுள்ளார். முன்னதாக கிறிஸ் கெயில், சுனில் நரேன் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் அணியில் இணைத்துக் கொள்ளப்படாத நிலையில் இவர்களின் இழப்பும் அணிக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.
 
மறுமுணையில் இந்திய அணித் தலைவர் விராட் கோலி இத் தொடரிலிருந்து விலகியுள்ளதனால், அணியின் தலைமைப் பொறுப்பினை ரோகித் சர்மா ஏற்றுள்ளார். அத்துடன் தமிழகத்தைச் சேர்ந்த வொசிங்டன் சுந்தர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரும் இந்திய அணிக் குழாமில் இந்தியா அணிக்கா இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
 
இந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இதுவரை சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இதுவரை 8 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 5 போட்டிகளிலும், மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 போட்டிகளிலும், ஒரு போட்டி எதுவித முடிவுகள் இன்றியும் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை