ஜி.எஸ்.டி. மூலம் அக்டோபரில் ரூ.1 லட்சத்து 710 கோடி வசூல்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

ஜிஎஸ்டி மூலம் அக்டோபர் மாதத்தில் மட்டும், மொத்தம் ரூ.1 லட்சத்து 710 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளது.

நாட்டின் மறைமுக வரியை முழுமையாக மாற்றிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி)  கடந்த வருடம் ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்டது.  அதன்படி ஒவ்வொரு மாதமும் ஜி.எஸ்.டி. வரியால் அரசு வருமானம் பெற்று வருகிறது.

 கடந்த வருடம் ஜி.எஸ்.டி. மூலம் தமிழக அரசுக்கு ரூ. 25 ஆயிரம் கோடி வரி கிடைத்துள்ளது என ஜி.எஸ்.டி. வரி ஓராண்டு நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் அருண் ஜெட்லி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  ஜி.எஸ்.டி. வசூல் ரூ.ஒரு லட்சம் கோடியை கடந்து உள்ளது எனக் குறிப்பிட்டு உள்ளார்.

 நடப்பு நிதியாண்டில் மாதம் தோறும் 1 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வரி வசூல் என இலக்கு நிர்ணயித்து இருந்தோம்.  இந்த  நிலையில், ஜி.எஸ்.டி. வசூல் கடந்த மே மாதத்தில் ரூ.94,016 கோடியாகவும், ஜூன் மாதத்தில் ரூ.95,610 கோடியாகவும், ஜூலை மாதத்தில் ரூ.96,483 கோடியாகவும், ஆகஸ்ட் மாதத்தில் ரூ.93,960 கோடியாகவும், செப்டம்பரில் ரூ.94,442 கோடியாகவும் இருந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் நிர்ணயித்த இலக்கையும்  தாண்டி ஜி.எஸ்.டி. வரி வசூல் அதிகரித்து உள்ளது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மூலக்கதை