டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வான 83 பேரும் பணியைத் தொடர சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் கடந்த 2005ம் ஆண்டில் தேர்வான 83 பேரும் தங்கள் பணியைத் தொடரலாம் என சுப்ரீம் கோர்ட்டு  உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2005ம் ஆண்டில் குரூப் -1 தேர்வு மூலம் 91 அதிகாரிகளை நியமனம் செய்தது. இதில், 8 பேர் தவிர மீதமுள்ள 83 அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த நீதிமன்றம், அதை 2011ல் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டும்  உறுதி செய்தது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி வழக்கறிஞர் மாதவன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

இதை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் மதன்.பி.லோகூர், குரியன் ஜோசப் அமர்வு விசாரித்தது. அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2005ல் நடத்தி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 83 பேரும் தங்கள் பணியைத் தொடரலாம்’ என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

மூலக்கதை