ஈரானுக்கு எதிராக அனைத்து தடைகளும் விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவிப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

ஈரானுக்கு எதிராக அனைத்து  தடைகளும் மீண்டும் விதிக்கப் படுவதாக அமெரிக்கா அறிவித்து உள்ளது.

 2015-ல் ரத்து செய்யப்பட்ட அனைத்துத் தடைகளும் மீண்டும் ஈரான் மீது விதிக்கப்படுகின்றன.  நவ.,4க்கு பிறகு எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

இருப்பினும், ஈரானிடம் எண்ணெய் வாங்குவது தொடரும் என இந்தியா கூறியது. இது குறித்து அமெரிக்காவிடம் விளக்கியது.

இந்த நிலையில் ஈரானிடம் எண்ணெய் வாங்கிக் கொள்ள, இந்தியா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளிக்க இருப்பதாகவும், இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்றும் தகவல் வெளியானது. 

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளால், ஈரான் பெரிய ஏமாற்றம் அடைந்து இருக்கிறது. 

இது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் பேசும் போது,  “மீண்டும் பேச்சு வார்த்தைக்கு தயாராக இல்லை. பொருளாதார தடை விதிக்க முழு மூச்சுடன் ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றனர்.

2.7 மில்லியன் வரை ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டிருந்த ஈரான் நாட்டின் பெட்ரோல் ஏற்றுமதி தற்போது 1.6 மில்லியன் வரை குறைந்தது குறிப்பிடத்தக்கது

மூலக்கதை