ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் வௌியீடு

PARIS TAMIL  PARIS TAMIL
ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் வௌியீடு

 ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளுக்கான தரவரிசை விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 
துடுப்பாட்ட தரவரிசையில் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி 899 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.
 
இந்திய அணியின் உப தலைவர் ரோஹித் சர்மா 871 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
 
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 807 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் 4வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 5வது இடத்திலும் உள்ளனர்.
 
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா 841 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.
 
ஆப்கானிஸ்தானின் ரஷிட் கான் 788 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இந்திய வீரர் குல்தீப் யாதவ் 723 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
 
இதேவேளை, ஒரு நாள் போட்டிகளின் அணிகளின் தரவரிசையில் 126 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலிடத்திலும், இந்திய அணி 121 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
 
நியூசிலாந்து அணி 112 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும், தென்னாபிரிக்கா அணி 110 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 101 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
 
இதேவேளை, 79 புள்ளிளுடன் இலங்கை அணி 8ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

மூலக்கதை