இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசர் உருவாக்கி சென்னை மாணவர்கள் சாதனை!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசர் உருவாக்கி சென்னை மாணவர்கள் சாதனை!

இந்தியாவிலேயே முதல் முறையாக மைக்ரோ பிராசசர்களை உருவாக்கி சென்னை மாணவர்கள் சாதனை புரிந்து உள்ளனர்.

'சக்தி' என பெயரிடப்பட்ட இந்த மைக்ரோ பிராசசர்கள், இஸ்ரோவின் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ சிப்கள் உதவியுடன் உருவாக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் மைக்ரோ பிராசசர்கள் தேவைக்கு வெளிநாட்டைச் சார்ந்திருப்பது குறைவதுடன், தொலைத் தொடர்பு மற்றும் பாதுகாப்புத் துறையில் சைபர் தாக்குதல்களை குறைக்க முடியும்.

இந்த ஆய்வில் ஈடுபட்டு, மாணவர்களுக்குப் பயிற்சி அளித்த பேராசிரியர் காமகோடி வீழிநாதன் கூறியதாவது:

"மைக்ரோ பிராசசர், எந்தவொரு சாதனத்திற்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. வெவ்வேறு சாதனங்களுக்கு வெவ்வேறு வகையான பிராசசர்கள் தேவைப்படும். தற்போது, நாங்கள் வடிவமைத்துள்ள புதிய பிராசசரின் மூலம் இந்தப் பிரச்னைக்கு முதன்முறையாகத் தீர்வு காணப்பட்டு உள்ளது."

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை