காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம் உதட்டை கடித்து துப்பிய காதலன்: 60 தையல் போட்டு சிகிச்சை பெறும் காதலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம் உதட்டை கடித்து துப்பிய காதலன்: 60 தையல் போட்டு சிகிச்சை பெறும் காதலி

கலிபோர்னியா: அமெரிக்காவில், காதலி தன்னை விட்டு பிரிவதாக கூறியதால் ஆத்திரமடைந்த காதலன், காதலியின் உதட்டை கடித்து துப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த மாணவன் ப்லூரி (23). இவர், கைலா ஹேய்ஸ் (19) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இருவருக்கும் அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், கடந்த சில நாட்களுக்கு முன் ப்லூரியை விட்டு பிரிவதாக ஹேயஸ் கூறியுள்ளார். ஆனால், தன் காதலியை முத்தமிட ப்லூரி முயற்சி செய்துள்ளார்.

அதனை ஹேயஸ் தடுத்தபொழுது, தன் காதலியின் உதட்டை கடித்து துப்பினார். படுகாயமடைந்த அந்த பெண்ணை, அப்பகுதியினர் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.அவருக்கு வாய்ப்பகுதியில் 60க்கும் மேற்பட்ட தையல்கள் போட்ட மருத்துவர்கள், கடும் சிரமத்திற்கு பிறகு உதட்டை ஒட்டவைத்துள்ளனர். இதுகுறித்து, கைலா ஹேய்ஸ் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

ெதாடர்ந்து, ப்லூரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில், கைலா ஹேய்ஸ் என்ற அந்த பெண் வேறொரு முன்னாள் காதலனுடன் செல்வதாக கூறியதால், அதற்கு ப்லூரி தடுத்து நிறுத்தி உள்ளார்.

ஒருகட்டத்தில் அவரை கடைசியாக முத்தமிடுவதாக கூறி, அவரின் உதட்டை கடித்து துப்பியதாக தெரியவந்தது.

போலீசார் ப்லூரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரித்த நீதிபதிகள் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.

.

மூலக்கதை