இந்தோனேசிய விமானம் கடலில் விழுந்ததில் 189 பயணிகள் பலி!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

 

இந்தோனேசிய விமானம் கடலில் விழுந்ததில் அதில் பயணம் செய்த  189 பயணிகள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.  தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பங்கல் பினாங் பகுதிக்கு, JD-610 என்ற  விமானம் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட 13 நிமிடங்களிலேயே, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.  காலை 7.20 மணிக்கு பங்கல் பினாங்க் பகுதிக்கு சென்றிருக்க வேண்டிய விமானம் ஏழரை மணியை கடந்தும் இலக்கை அடையாததால், அதிகாரிகள் விமானத்தை தேடும் பணியை தொடங்கினர்.  இந்த நிலையில் அந்த விமானம் விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டது. சுமத்ரா கடல் பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தின் பல்வேறு பாகங்கள், இருக்கைகள் மற்றும் பயணிகள் ஒரு சிலரின் பைகளும் மிதந்ததை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர்.  இது தொடர்பான புகைப்படங்களையும், விமானத்தில் பயணம் செய்தவர்களை தேடும் பணி தொடர்பான வீடியோவையும், இந்தோனேசிய பேரிடர் மேலாண்மைக் குழு வெளியிட்டது. இந்த நிலையில் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 189 பயணிகளும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை, பலியாகி இருக்கலாம் என்று அந்நாட்டு மீட்புக்குழு அறிவித்து உள்ளது

இந்தோனேசிய விமானம் கடலில் விழுந்ததில் அதில் பயணம் செய்த 189 பயணிகள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பங்கல் பினாங் பகுதிக்கு, JD-610 என்ற  விமானம் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட 13 நிமிடங்களிலேயே, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

காலை 7.20 மணிக்கு பங்கல் பினாங்க் பகுதிக்கு சென்றிருக்க வேண்டிய விமானம் ஏழரை மணியை கடந்தும் இலக்கை அடையாததால், அதிகாரிகள் விமானத்தை தேடும் பணியை தொடங்கினர்.

இந்த நிலையில் அந்த விமானம் விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டது. சுமத்ரா கடல் பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தின் பல்வேறு பாகங்கள், இருக்கைகள் மற்றும் பயணிகள் ஒரு சிலரின் பைகளும் மிதந்ததை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர். 

இது தொடர்பான புகைப்படங்களையும், விமானத்தில் பயணம் செய்தவர்களை தேடும் பணி தொடர்பான வீடியோவையும், இந்தோனேசிய பேரிடர் மேலாண்மைக் குழு வெளியிட்டது. இந்த நிலையில் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 189 பயணிகளும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை, பலியாகி இருக்கலாம் என்று அந்நாட்டு மீட்புக்குழு அறிவித்து உள்ளது

 

மூலக்கதை