இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பான் தொழிலதிபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பான் தொழிலதிபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

 ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஜப்பான் நிறுவன தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உடனான கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

 இந்தியாவை ஒரு சிறிய ஜப்பானாக உருவாக்குவதே நமது நோக்கம் . தொழில் தொடங்கத் தேவைப்படும் கட்டமைப்புகள் இந்தியாவில் எளிதாகக் கிடைக்கின்றன. ஜப்பானில் உள்ள தொழில் அதிபர்களை இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு  அழைக்கின்றேன்.

ஜப்பானைச் சேர்ந்த பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே  இந்தியாவில் வெற்றிகரமாக தொழில் செய்து வருகின்றன. இந்தியா- ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான உறவுகள் வலுப்பெற்றுவரும் சூழலில் புதிதாக தொடங்கப்படும் தொழில்களால் அது மேலும் உறுதியாகும்.

2014-ம் ஆண்டு நமது அரசு பொறுப்பேற்ற பிறகு தொழில் தொடங்க ஏற்ற நாடுகளுக்கான உலகவங்கியின் பட்டியலில் 140-வது இடத்திலிருந்து 100-வது இடத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளது.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

மூலக்கதை