நவம்பர் 1ம் தேதி முதல் தமிழகம், புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: வானிலை மையம் அறிவிப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

நவம்பர் 1ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என  சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.

அக்டோபர் மாதத்திலேயே வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் வானிலை முன் அறிவிப்பு குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் ஸ்டெல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கைப் பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டு இருக்கிறது.இந்த சுழற்சியால் வடமேற்கு வங்கக்கடல் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. இது மேலும் வலுவடைந்து மேற்கு திசை நோக்கி நகரும் போது வடகிழக்கு பருவக்காற்று வலுவடைந்து வடகிழக்கு பருவமழையாக வரும் நவம்பர் 1ம் தேதி முதல் தொடங்கலாம்.

 தமிழகம், புதுவையை ஒட்டியுள்ள தெற்கு கடலோர பகுதிகள்,  கர்நாடகாவை உள்ளடக்கிய பகுதிகள், ராயலசீமா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பருவமழை துவங்க சாதகமான சூழல் உருவாகி வருகிறது. தித்லி மற்றும் லூபான் புயல் காரணமாகவே பருவமழை தாமதமாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை