கடுப்பானதால் களத்திலிருந்து வெளியேறிய வார்னர்!

PARIS TAMIL  PARIS TAMIL
கடுப்பானதால் களத்திலிருந்து வெளியேறிய வார்னர்!

உள்ளூர் கிளப் கிரிக்கெட் போட்டியின்போது கேலி செய்த காரணத்தால் கோபம் அடைந்த டேவிட் வார்னர் துடுப்பெடுத்தாடுவதை இடை நடுவில் நிறுத்தி விட்டு ஆடுகளத்தவேிட்டு வெளியேறினார். 
 
32 வயதாகும் டேவிட் வார்னர் கடந்த மார்ச் மாதம் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய காரணத்துக்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஓர் ஆண்டு விளையாட தடை விதித்தது.
 
இருப்பினும் உள்ளூரில் நடைபெறும் சிறிய போட்டிகளில் விளையாடுவதற்கு அவுஸத்ரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியது. 
 
இதற்கமைவாக அவர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ரான்ட்விக் பீட்டர்ஷாம் அணிக்கா விளையாடி வருகிறார். 
 
இந் நிலையில் சிட்டினியில் நேற்று இடம்பெற்ற வெஸ்டர்ன் சபர்ப்ஸ் அணிக்கு எதிரான போட்டியொன்றில் வார்னர் துடுப்பெடுத்தாடி வரும்போது எதிரணியின் வீரர் ஜேசன் ஹியூக்ஸ் கேலி செய்துள்ளார். அவர் என்ற கூறினார் என வெளியாகவில்லை. எனினும் பந்தை சேதம் செய்த விவகாரம் குறித்துதான் விமர்சித்து இருப்பார் என்று தெரியவருகிறது.
 
இதனால் கோபமுற்ற டேவிட் வார்னர், 35 ஓட்டத்துடன்  மைதானத்தை விட்டு வெளியேறினார். அவரை சக வீரர்கள் சமாதானப்படுத்தியதையடுத்து சில நிமிடங்களில் களம் திரும்பிய தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடி 157 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.

மூலக்கதை