சூரிய மின்சக்தி மோட்டார்களை விவசாயிகள் அதிகம் நிறுவிட பிரதமர் மோடி வேண்டுகோள்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
சூரிய மின்சக்தி மோட்டார்களை விவசாயிகள் அதிகம் நிறுவிட பிரதமர் மோடி வேண்டுகோள்!

விவசாய பண்ணைகளில் சூரிய மின்சக்தி மோட்டார்களை அதிக அளவு நிறுவ முன்வரவேண்டும் என்று பிரதமர் மோடி விவசாயி களை கேட்டுக்கொண்டு உள்ளார். 
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற ` கிரிஷி கும்ப்’ என்ற நிகழ்ச்சியை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் டெல்லியில் இருந்து தொடங்கி வைத்தார்.
 இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். அவர்களிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மோடி பேசியதாவது: 
உத்தரப்பிரதேச அரசு, உணவு தானியங்களை அதிக அளவு கொள்முதல் செய்ய தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதைப் பாராட்டுகிறேன். 
தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து உள்ளது கவலையைத் தருகிறது. எனவே விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்து அறுவடை செய்த பயிர்களின் மிச்சத்தை அகற்ற தீவைத்து எரிப்பதை தவிர்க்க வேண்டும். இதற்கு புதிய தொழில்நுட்பத்தை கண்டறிவது அவசியம். வரும் 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்தும் மத்திய அரசின் முடிவுக்கு நீங்கள் ஆதரவு தரவேண்டும். 
பயிர்களை விளைவிப்பதற்குச் செலவிடும் தொகையைக் குறைத்து லாபம் அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக வரும் காலங்களில் சூரிய மின்சக்தியால் இயங்கும் மோட்டார்களை விவசாய பண்ணைகளில் அதிக அளவு நிறுவ விவசாயிகள் முன்வரவேண்டும். பசுமைப் புரட்சியைத் தொடர்ந்து தற்போது பால், தேன் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு உள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.  

மூலக்கதை