"அலோக் வர்மா நீக்கம் அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயல்"- ராகுல் காந்தி!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்


 ‘‘அலோக் வர்மாவை சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்கியது, அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயல்’’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

 சிபிஐ இயக்குனர்  அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் அஸ்தானா இடையிலான ஊழல் குற்றச்சாட்டு புகார் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அவர்கள் இருவரையும் நீண்ட விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது. 

இது தொடர்பாக, நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறுகையில்,` மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் அலோக் வர்மாவும், அஸ்தானாவும் விடுமுறையில் அனுப்பப்பட்டு உள்ளனர் என்றும் சிபிஐ அமைப்பின் ஒற்றுமையை  பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும்’ தெரிவித்து இருந்தார்.

 இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நிருபர்களிடம் கூறியதாவது:

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக வர்மா புலனாய்வு மேற்கொள்ள முயன்றதால் மத்திய அரசு பீதியடைந்து அவரை பதவியில் இருந்து நீக்கி உள்ளது. வர்மாவின் பதவி நீக்கம் சட்ட  விரோதமானது. வர்மா நீக்கப்பட்டது அரசியலமைப்பு, இந்திய தலைமை நீதிபதி, எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை அவமானப்படுத்தும் செயல்.

மேலும் சிபிஐக்கு இடைக்கால இயக்குனராக நாகேஷ்வர ராவை நியமித்ததன் மூலம்  பிரதமர் சி.பி.ஐ.யை கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மூலக்கதை