மெக்ஸிகோவில் அல்ப்ரிஜஸ் திருவிழா கோலாகல கொண்டாட்டம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

மெக்ஸிகோ நாட்டில், அல்ப்ரிஜஸ் எனும் திருவிழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

 பறக்கும் மான், நான்கு கால் சேவல், டிராகன், எலும்புக்கூடுகள் என வினோத உருவங்களைப் படைத்து திருவிழாவை கோலாகலமாகக் கொண்டாடினர்.

 மெக்ஸிகோவின் புகழ் பெற்ற கலைஞரான பெட்ரோ லினரிஸ் என்பவரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது கனவில் வந்த, வினோத விலங்குகள் போன்ற உருவங்களை அவர் சிற்பமாக செய்து அவற்றுக்கு அல்ப்ரிஜஸ் என பெயர் சூட்டினார். 

இதன் காரணமாகவே இந்தத் திருவிழாவை மெக்ஸிகோ மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த விழாவின் போது மெக்ஸிகோ மற்றும் நாடு முழுவதும் இருந்து வந்த கலைஞர்கள் விலங்குகள், வினோதமான பொருட்கள் என அவரின் கற்பனை உருவங்களை பல வண்ணங்களில் உருவாக்கி இருந்தனர். 

மேலும் அந்த படைப்புகள் மெக்ஸ்கோவின் வீதியில் நடன கலைஞர்கள் சூழ ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதனை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த மக்கள் கண்டு ரசித்தனர்.

மூலக்கதை