சீனா- ஹாங்காங்கை இணைக்கும் நீளமான புதிய கடல் பாலம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
சீனா ஹாங்காங்கை இணைக்கும் நீளமான புதிய கடல் பாலம்!

சீனாவில் இருந்து ஹாங்காங்கை கடல் வழியாக இணைக்கும் வகையில் மிக நீளமான புதிய  கடல் பாலம் திறக்கப்பட்டு உள்ளது.

சீன அதிபர் ஜீ ஜின்பிங் இந்த பாலத்தை திறந்து வைத்தார். ஆசியாவின் பொருளாதார மையமாக திகழும் ஹாங்காங்கை சீனாவின் முக்கிய நகரமான சூகாயுடன் கடல் வழியாக இணைக்கும் வகையில் கடலில் பாலம் கட்டும் பணி கடந்த 2009ம் ஆண்டு  தொடங்கப்பட்டது.

பட்ஜெட், ஊழல் வழக்கு மற்றும் கட்டுமான ஊழியர்கள் மரணம் போன்ற பல்வேறு காரணங்களால் பாலம் கட்டும் பணியில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. ரூ.1.47 லட்சம் கோடி செலவில் 2016ம் ஆண்டில் கட்டுமான பணிகள் முழுவதும் முடிந்தன. கடலில் 55 கி.மீ. நீளம் செல்லும் இந்த கடல் பாலம் திறப்பு விழா சீனாவின் சூகாயில் நடைபெற்றது. 

இந்த விழாவில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் கலந்து கொண்டு முறைப்படி பாலத்தை திறந்து வைத்தார். இந்த பாலத்தின் மூலமாக ஹாங்காங், மக்காவ்-சூகாய் என 3 பகுதியில் இருந்து வர்த்தகம் மற்றும் பொருளாதார பரிமாற்றத்தை அதிகரிக்க முடியும். 

மேலும் ஹாங்காங்-சீனா இடையிலான  போக்குவரத்து நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 30 நிமிடங்களாக குறையும். இதுதான் உலகின் மிக நீளமான கடல் பாலம். இந்த பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது.

மூலக்கதை