அடுத்தாண்டு ஏப்ரலில் தொடங்குகிறது இந்தியாவில் ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அடுத்தாண்டு ஏப்ரலில் தொடங்குகிறது இந்தியாவில் ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ்

லாசென்னே:  சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் போட்டிகள் இந்தியாவில் அடுத்தாண்டு ஜூன் 6 முதல் 16ம் தேதி வரை நடைபெறவுள்ளது. சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எப். ஐ. எச்) சார்பில், ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் போட்டிகள், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது.

இங்கு ஏப்ரல் 23 முதல் மே 1ம் தேதி வரை முதல்கட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன.   2ம் கட்ட போட்டிகள் பிரான்ஸில் உள்ள லி டய்குயட் நகரில் ஜூன் 15 முதல் 23ம் தேதி வரையில் நடக்கிறது. 3ம் கட்ட போட்டிகள் இந்தியாவில் ஜூன் 6 முதல் 16ம் தேதி வரை நடைபெறவுள்ளது.



இந்தியாவில் போட்டி நடைபெறும் இடங்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை.   ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் போட்டியில், இந்தியா, ரஷ்யா, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா உள்ளிட்ட 24 அணிகள் மோதுகின்றன. இந்த அணிகள் 8 ஆக பிரிக்கப்படும்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள், 2020ம் ஆண்டில் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்றில் இடம்பெறும். எனவே, இந்த போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதேபோல் மகளிர் ஹாக்கி அணிகளுக்கான 3 கட்ட போட்டிகள் அயர்லாந்தில் அடுத்தாண்டு ஜூன் 8 முதல் 16ம் தேதி வரையும், ஜப்பானில் 15 முதல் 23ம் தேதி வரையிலும், வாலன்சியாவில் ஜூன் 19 முதல் 27ம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.


.

மூலக்கதை