சுவிஸில் பரபரப்பை ஏற்படுத்திய நிர்வாண இளைஞன்..!

PARIS TAMIL  PARIS TAMIL
சுவிஸில் பரபரப்பை ஏற்படுத்திய நிர்வாண இளைஞன்..!

சூரிச்சில் உள்ள Circle 5 பகுதியில் ஞாயிறன்று காலை நிர்வாண இளைஞர் ஒருவரின் நடமாட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
குறித்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசாருடன் அந்த இளைஞர் கோபமாக பெருமாறியதாகவும் தெரியவந்துள்ளது.
 
சூரிச் சாலையில் நிர்வாணமாக நடமாடிய குறித்த 27 வயது இளைஞர் இரவு விடுதி ஒன்றில் காணப்பட்டதாகவும்,
 
அப்போது அவர் உடை அணிந்து காணப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
 
அங்கிருந்து டாக்ஸி ஒன்றில் ஏறும் முன்னர், மிக விரைவில் நிர்வாண நபர் ஒருவர் உங்களை சந்திப்பார் என தமது நண்பர்களிடம் அவர் கூறியுள்ளார்.
 
இதனையடுத்தே அவர் சாலையில் நிர்வாணமாக நடமாடினார் என கூறப்படுகிறது. சம்பவயிடத்திற்கு பொலிசார் சென்ற நிலையில், அந்த நபர் ஆர்வம் ஏதும் காட்டவில்லை என கூறப்படுகிறது.
 
மட்டுமின்றி பொலிசாருடன் மல்லுக்கு நின்றதாகவும், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் அந்த இளைஞரை அழைத்து சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
குறித்த இளைஞரை பொலிசார் நேரடியாக மருத்துவமனை அழைத்து சென்றுள்ளதாகவும், அந்த இளைஞரின் நடவடிக்கை தொடர்பில் ஆய்வுக்கு உட்படுத்த உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை