திடீரென உடைந்து சிதறிய ஜன்னல்! அவசரமாகத் தரையிறங்கிய விமானம்

PARIS TAMIL  PARIS TAMIL
திடீரென உடைந்து சிதறிய ஜன்னல்! அவசரமாகத் தரையிறங்கிய விமானம்

விமானி அறையின் கண்ணாடி ஜன்னல் உடைந்து சிதறியதைத் தொடர்ந்து ஐஸ்லந்துஏர் விமானம் (Icelandair) கனடாவில் அவசரமாகத் தரையிறங்கியது.

 
விமானியின் இடது பக்கத்திலிருந்த கண்ணாடிச் ஜன்னல் உடைந்ததாக அவர் அறிவித்ததைப் பயணி ஒருவர் Twitter பக்கத்தில் பதிவுசெய்தார்.
 
சம்பவத்தால் விமானத்திலிருந்த யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை எனக் கூறப்பட்டது.
 
சன்னல் வெடிப்பு 20 சென்டிமீட்டர் நீளம் இருந்ததாக விமான ஊழியர் ஒருவர் கூறினார்.
 
155 பயணிகளையும் 7 ஊழியர்களையும் ஏற்றிச்சென்றது விமானம். 

மூலக்கதை