ஒரே இரவில் 300,000க்கும் மேற்பட்ட மின்னல் வெட்டு! அதிர்ச்சியில் நாட்டு மக்கள்

PARIS TAMIL  PARIS TAMIL
ஒரே இரவில் 300,000க்கும் மேற்பட்ட மின்னல் வெட்டு! அதிர்ச்சியில் நாட்டு மக்கள்

 ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் நேற்றிரவு 300ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்னல் வெட்டுச் சம்பவங்கள் ஏற்பட்டன.

 
கூரி (Geurie) வட்டாரத்தில் ஆடவர் ஒருவர் மாண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
 
அந்தப் பகுதியில் மட்டுமே 7ஆயிரத்துக்கும் அதிகமான மின்னல்கள் பதிவாயின.
 
தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
 
பலத்த காற்று, கன மழை ஆகியவற்றால், நேற்று Invictus விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பிரிட்டன் இளவரசர் ஹேரியும், அவரது மனைவி மேகனும் அதனைத் தொடங்கிவைத்தனர்.

மூலக்கதை